பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றுள்ளார்.
ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்தன் மூலம், பல தசாப்தங்களாக பிரேசிலின் வலதுசாரி நிர்வாகம் வீழ்ச்சியடைந்தது.
தற்போதைய ஜனாதிபதி போல்சனாரோ 49.1 சதவீத வாக்குகளும், லூலா 50.9% வாக்குகளைப் பெற்றனர்.
77 வயதான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அரசு ஜனவரி 1 ஆம் திகதி அமைக்கப்படும்.
போல்சனாரோவின் பழமைவாத கூட்டணியை பிரேசிலியர்கள் ஆரம்பத்தில் ரசித்த போதும், COVID-19 தொற்றுநோயால் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்ட போது, மக்களின் அப்பிராயம் மாறத் தொடங்கியது.
67 வயதான போல்சனாரோ, பிரேசிலில் வாக்குப்பதிவில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினார். எனினும், அதற்கு ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
லுலா தனது ருவிற்றர் பக்கத்தில், இடது கையின் கீழ் பிரேசிலியக் கொடியின் படத்தையும் “ஜனநாயகம்” என்ற வார்த்தையுடன் பதிவிட்டுள்ளார். பல தசாப்தங்களுக்கு முன்னர் உலோகத் தொழிலாளியாக இருந்த அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தனது சிறிய விரலை இழந்தார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அர்ஜென்டினாவின் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட உலகத் தலைவர்களிடமிருந்து லூலாவுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட்டன.
2003 முதல் 2010 வரை அவர் ஜனாதிபதியாக இருந்தபோது, மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து தப்பிக்க உதவிய அரசு உதவி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகக் கொள்கைகளை மீண்டும் கொண்டுவருவதாக லூலா உறுதியளித்தார்.
சர்வதேச காலநிலை பேச்சுவார்த்தைகளில் பிரேசிலை முன்னணியில் ஆக்குவதாகவும், அமேசான் மழைக்காடுகளின் அழிவை நிறுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கொலம்பியா மற்றும் சிலி தேர்தல்களில் இடதுசாரி தலைவர்கள் வெற்றியடைந்துள்ள நிலையில், மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடானா பிரேசிலிலும் இடதுசாரி தலைவர் ஒருவர் பெற்றியடைந்துள்ளார்.