ஜேவிபி திருந்தி விட்டதென நினைத்தேன்: சொல்பவர் நாமல்!

Date:

மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் ஜே.வி.பி எவ்வாறு நடந்துகொண்டதோ அவ்வாறே இப்போதும் நடந்து கொள்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“ஜே.வி.பியில் ஓரளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால், மே 9 அன்று அவர்கள் நடந்துகொண்ட விதம் 88 மற்றும் 89 காலகட்டங்களின் நடத்தையை காட்டுகிறது” என்று நாமல் கூறினார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜே.வி.பி தமது தடிகள், வாள்கள், கத்திகள் மற்றும் தீப்பந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக தொழிலாளர்களுடன் இணைந்து கொண்டதாக தாம் நினைத்ததாகக் கூறினார்.

“நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் ஜே.வி.பி.யும் இணைந்துகொள்வதற்கான கொள்கைத் தீர்மானத்திற்கு வரும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அது அப்படித் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாமல், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போதைய ஜனாதிபதி குறிப்பிட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கும் ஜனாதிபதியின் கொள்கைகளுக்குமிடையில் ஒரு மையப் புள்ளியைக் கண்டறிய முயற்சிப்பதாக கூறினார்.

“எனவே, நாங்கள் அவருக்கு சிறந்த ஆதரவை வழங்குவோம். நாங்கள் இருவரும் தனித்தனி அரசியல் கட்சிகள் அரசியல் கொள்கைகளை கருத்தில் கொள்ளும்போது நாங்கள் தனித்தனியாக நிற்கிறோம். ஆனால் ஜனாதிபதியும் நாமும்  நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம் என நாமல் தெரிவித்தார்.

எந்த ஒரு கொள்கை முடிவும் எடுக்க முடியாவிட்டால், அவருடன் பேசி அதை சரிசெய்வோம் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்