ஆயுர்வேத வைத்தியர் என ‘ஆட்டையை போட’ முயன்றவர் கைது!

Date:

ஆயுர்வேத மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்க தனியாகச் சென்ற பெண் ஒருவரிடம், தானும் ஆயுர்வேத வைத்தியர் என்று கூறி, பெண்ணை வீடியோ எடுத்து அவரிடம் பாலியல் சில்மிசம் செய்ய முயன்ற காத்தான்குடியைச் சேர்ந்த கடை முதலாளியை, நேற்று முன்தினம் (28) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கையில் ஏற்பட்டுள்ள தோல் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, நேற்று முன்தினம் (28) தனியார் வைத்தியசாலை ஒன்றின் விசேட வைத்திய நிபுணரிடம் சென்றுள்ளார்.

ஆயுர்வேத மருந்து ஒன்றை எழுதி கொடுத்த வைத்தியர், அதனை நகரில் உள்ள ஆயுர்வேத கடை ஒன்றின் பெயரை தெரிவித்து, அங்கு குறித்த மருந்தை வாங்கிப் பயன்படுத்துமாறு சிபாரிசு செய்துள்ளார்.

இதனையடுத்து, வைத்தியர் சிபாரிசு செய்த ஆயுர்வேத மருந்துக்கடையை தேடி குறித்த பெண் இரவு 7.15 சென்ற போது அங்கு கடை ஒற்றைக் கதவில் திறந்திருந்துள்ளது.

கடையை மூடி விடப் போகிறார்கள் என்று எண்ணிய குறித்த பெண், அவசர அவசரமாக கடைக்குள் சென்று வைத்தியர் எழுதி கொடுத்த மருந்து சிட்டையை கடை முதலாளியிடம் கொடுத்துள்ளார்.

இதன்போது கடைக்குள் தனியாக இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதான கடை முதலாளி தானும் ஆயுர்வேத வைத்தியர் என்று கூறியதுடன், “உங்கள் கண்ணை காட்டுங்கள் நான் பார்க்கின்றேன்“ என்று கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணும், அவரை வைத்தியர் என நினைத்து அவரிடம் கண்ணைக் காண்பித்தபோது, அவர் தனது தொலைபேசியிலுள்ள வெளிச்சத்தை அடித்து கண்ணை பார்ப்பது போல வீடியோ எடுத்துக் கொண்டே பாலியல் சில்மிசம் செய்ய முயன்றுள்ளார்.

உடனடியாக சுதாகரித்துக் கொண்ட அப்பெண், வீடியோ எடுத்ததை கண்டு சத்தம் போட்டு தொலைபேசியை பறிக்க முற்பட்ட போது, தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோவை உடனடியாக கடை முதலாளி அழித்துள்ளார்.

அந்த நேரத்தில் சத்தம்கேட்டு வீதியில் நின்றவர்கள் அங்கு ஒன்று திரண்டு கடை முதலாளியினால் அழிக்கப்பட்ட வீடியோவை மீண்டும் மீள எடுத்து்ள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், பொலிஸாருக்கு செய்த முறைபாட்டையடுத்து உடனடியாக கடை முதலாளியை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில், கைது செய்யப்பட்டவரை சான்றுப் பொருளான வீடியோ எடுத்த தொலைபேசியையுடன், நேற்று (29) ஆஜர்படுத்திய போது அவரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்ததுடன், எதிர்வரும் 2023 ஜனவரி 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...

ரஷ்ய எண்ணெய்க்கு சீன நாணயத்தில் பணம் செலுத்தவுள்ள இலங்கை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள இலங்கை, அதற்கான பணத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்