ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் சிம்பாவே வீழ்த்தியதை தொடர்ந்து ட்விட்டரில் போலி ‘மிஸ்டர் பீன்’ பதிவு வைரலானது.
இதற்கு காரணம் 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் முகமது, சிம்பாவே நிகழ்ச்சி ஒன்றில் ‘மிஸ்டர் பீன்’ போன்று வேடமிட்டு கலந்து கொண்டதை மையமாக வைத்து சிம்பாவே ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுதான்.
இந்த பதிவானது பேசும் பொருளாக மாறியது.
இந்த விவகாரத்தில் சிம்பாப்வே ஜனாதிபதி எம்மர்சன், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோரும் வேடிக்கையாக கருத்துகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆசிப் முகமது, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “சிம்பாவே நாட்டை மிகவும் நேசிக்கிறேன். பாகிஸ்தான் – சிம்பாவே போட்டி கடினமாக இருந்தது. சிம்பாவே அணிக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.