25.1 C
Jaffna
March 6, 2025
Pagetamil
குற்றம்

மன்னாரில் மனைவியின் தங்கையான 15 வயது மாணவியை தனி வீட்டில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அத்தான்: காவலுக்கு நின்ற இருவர்!

தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை (04-11-2022) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை(27) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.

மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் மாணவியை தேடி வந்தனர். மாணவியின் மூத்த சகோதரியின் கணவர் அவரை தாராபுரம் கிராமத்தில் உள்ள பிறிதொரு வீட்டில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக தெரியவந்தது.

சுமார் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட தாக தெரியவந்துள்ளது.

மாணவி தடுத்து வைக்கப்பட்ட வீட்டிற்கு இருவர் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் 3 நாட்களின் பின்னர் மாணவி வீடு சென்ற நிலையில், வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர்.

சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தனது சகோதரியின் கணவரால் தான் தடுத்து வைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட தாகவும், மேலும் இருவர் உடந்தையாக இருந்தமையை குறித்த சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மை தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் சகோதரியின் கணவர் மற்றும் ஏனைய இருவரையும் பொலிஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவர் சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (28) முன்னிலையானார்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!