24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாணவர் பிரதிநிதிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்க முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழு!

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து ல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அமைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதியில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ‘சட்டவிரோத நடவடிக்கைகளில்’ ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை நியாயமற்ற மற்றும் அடக்குமுறையான சூழ்நிலை என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் இருவரும் கைதிகளின் உடல்நிலையை அவதானிக்கச் சென்றதாகவும், கல்வெவ சிறிதம்ம தேரரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்கு எதிராக பொதுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்திருப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்புக்காவல் உத்தரவை மேலும் நீட்டிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment