வாதுவ பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீர் விளையாட்டில் ஈடுபட்டு, அதை டிஜிட்டல் கமராவில் பதிவு செய்ய முயன்ற கொரிய நபர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 43 வயதான கிம் மிங்சன் என்ற தென் கொரியர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் நேற்று முன்தினம் (17) வாதுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதிக்கு வந்திருந்த நிலையில் நேற்று (18) காலை நீச்சல் குளத்தில் கிடப்பதை விடுதியின் ஊழியர் ஒருவர் பார்த்ததையடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை 7 மணி முதல் 8 மணி வரை நீச்சல் குளத்தின் சுவரில் கமரா ட்ரைபாட் வைக்கப்பட்டு இருபுறமும் பதிவாகும் அதிநவீன டிஜிட்டல் கமரா பொருத்தப்பட்டு பதிவாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவரது தலை சுவரில் மோதி உயிரிழந்துள்ளார்.




