தாம்பூலம் தரிக்க சென்றவர் ஆற்றில் சடலமாக மீட்பு!

Date:

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் முனைக்காடு பெரியகளப்பு ஆற்றில் நண்பர்களுடன் சென்று நீராடி கொண்டிருந்த போது காணாமல் போன ஆண் ஒருவர் நேற்று (14) பகல் அந்தபகுதி ஆற்றில் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முனை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய விநாயகமூர்த்தி விஜயராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட நண்பர்கள் சம்பவதினமான வியாழக்கிழமை (13) முனைக்காடு ஆற்றுபகுதிக்கு சென்று அங்கு உணவு சமைத்து சாப்பிட்டு மது அருந்தி ஆற்றில் நீராடி களியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது சடலமாக மீட்கப்பட்டவர் அருகில் சென்று வெற்றிலையை வாயில் போட்டு வருவதாக சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரை அங்கு தேடிய நிலையில் அவரை காணாததை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று பகல் காணாமல் போனவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக நீரில் மிதப்பதைக்கண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை கரைக்கு இழுத்துக் கொண்டுவந்த பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...

மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களை பயிர் செய்கையாளர்கள் அச்சுறுத்துவது தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு, மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்களை சட்டவிரோதமாகப் பயிர்ச்செய்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்