கடலட்டை பண்ணையால் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்!

Date:

பாரம்பரியமாக மீனவர்கள் தொழில் செய்யும் இடத்தில் சட்டவிரோதமாக
கடல் அட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபடுவதனால் பாரம்பரிய மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது என கிராஞ்சி இலவங்குடா கிராம மீனவர்கள் கவலை வெளியிட்டனர்.
கிளிநொச்சி – கிராஞ்சி இலவங்குடா கிராமத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி  தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டத்தில்  மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், தமது போராட்டம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில், அட்டைப் பண்ணை அமைப்பதற்காக
கடற்கரையோரமாக  இருக்கின்ற  கண்டல் தாவரங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். இதனால் மீன் பெருக்கம் தடைப்படுவதுடன்  பாரம்பரிய மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் இது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டோம்.
விரைவில் இதற்கு நீதி கிடைக்க  வேண்டும்.
மனிதஉரிமை ஆணைக்குழுவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்து இருந்தமைக்கு அமைவாக விசாரணைக்கு இன்று வருகை தந்திருந்தோம். இவ் விசாரணையில்  நீரியல் வளத்துறை அதிகாரி வருகை தந்திருந்ததுடன் அட்டை பண்ணை அமைப்பதற்கு எந்தவித சிபாரிசும் வழங்கவில்லை என திட்டவட்டமாக கூறி இருந்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
மேலும் தெரிவிக்கையில் தங்களுடைய போராட்டத்திற்கு எந்த அதிகாரிகளும் எங்களுக்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எவ்வித தீர்வையும் பெற்று தரவில்லை என்றும் குற்றச்சாடினர்.
spot_imgspot_img

More like this
Related

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்