அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிஸ்டத்தில் 10 லட்சம் வென்றோருக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் டிப்போ சந்தியில் இடம்பெற்றது.
இதன்போது 10 லட்சம் ரூபா அதிஸ்டம் வென்ற கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏ. சிவகுமார் மற்றும் ஆர்.நகுலேஸ்வரகுமார் ஆகிய இருவருக்கும் காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
நிகத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரட்ண நாரகல, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.




