26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

வருங்கால மாப்பிள்ளைக்கு 125 உணவு வகைகளுடன் விருந்து: ஆந்திராவில் பரிமாறி அசத்திய மாமியார்

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா-சுப்புலட்சுமி தம்பதியின் ஒரே மகன் சைதன்யா. இவருக்கும், விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ்-தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9 இல் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்தனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா.

அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார். அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் மாப்பிள்ளை சைதன்யா. இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியாது. ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டினார் சைதன்யா

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment