‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கொண்டுவரப்பட்ட 51/5 தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று (06) இடம்பெற்றது.
இந்த பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்தன.
20 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. அதன்படி இலங்கை தொடர்பான பிரேரணையை மனித உரிமைகள் பேரவை ஏற்றுக்கொண்டது.