பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய பதில வைத்திய அத்தியட்சகர் நியமனம் தொடர்பாக, நோயாளர் நலன்புரி சங்கத்தின் பெயரில் வெளியான பத்திரிகை அறிக்கை, தன்னிச்சையாக வெளியிடப்பட்ட அறிக்கையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயாளர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களிற்குள் கலந்துரையாடப்படாமல், தன்னிச்சையாக வெளியிடப்பட்டதாக அதன் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர் ம.தயாளினி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர் கமலநாதன், வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளி்க்கிழமை முதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வந்தன.
இந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் பெயரில் ஊடகங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, நோயாளர் நலன்புரி சங்கத்திற்குள் கலந்துரையாடாமல், யாரோ ஒருவரால் அல்லது ஒரு சிறு குழுவினரைால் தன்னிச்சையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது நோயாளர் நலன்புரி சங்கத்தின் கருத்தல்ல என நோயாளர் நலன்புரி சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.