25.7 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

உக்ரைனில் ரஷ்யப்படைகளால் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையர் 7 பேரின் விபரம் வெளியானது!

உக்ரைனின் கார்கிவ் ஒப்லாஸ்ட் பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியதை தொடர்ந்து, சிறையிலிருந்து தப்பித்த ஏழு இலங்கைப் பிரஜைகளின் விவரங்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது.

கார்கிவ் மாகாணத்தில் உள்ள தேசிய காவல்துறையின் புலனாய்வுத் துறையின் தலைவர் Serhii Bolvinov இது தொடர்பான தகவல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது தகவலின்படி,

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு ஆரம்பித்த போது, ஒரு பெண்ணும், 6 ஆண்களுமான இலங்கைக்குழுவொன்று குபியன்ஸ்க் பகுதியில் தங்கியிருந்தனர். அவர்கள் போர் ஆரம்பித்ததும், அச்சமடைந்து, வெளியேறிச் செல்லாமல் அங்கு  ஒளிந்து கொள்ள முடிவு செய்தனர்.

மே மாதத்தில், அவர்கள் கார்கிவ் நகரை கால்நடையாக அடைய முயன்றனர், ஆனால் முதல் ரஷ்ய இராணுவ சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டனர். ரஷ்யர்கள் அவர்களின கைகளைக் கட்டி, தலையில் பைகளை வைத்து, வோவ்சான்ஸ்கில் உள்ள ஒரு தற்காலிக சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

“இலங்கைப் பிரஜைகள் அங்கு மனிதாபிமானமற்ற நிலையில் வைக்கப்பட்டனர்; அவர்கள் துப்புரவுத் தொழிலாளிகளாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு பெண் இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர்களில் இருவரின் நகங்கள் கிழிக்கப்பட்டன; ஒருவரின் தலையில் கதவால் தாக்கப்பட்டார். ரஷ்யர்கள் ஆங்கிலம் பேசாததால், ரஷ்யர்கள் என்ன விரும்புகிறார்கள், எதற்காக அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்று இலங்கையர்களுக்கு ஒருபோதும் புரியவில்லை. சித்திரவதையின் போது ரஷ்யர்கள் ‘money’ (பணம்) என்று சொன்னது மட்டுமே அவர்களுக்குப் புரிந்தது. இதைப் பார்த்தால், உலகின் இரண்டாவது பெரிய இராணுவம் இலங்கையில் இருந்து வந்தவர்களை பணம் கேட்டு தடுத்து வைத்துள்ளது தெரிகிறது.

வோவ்சான்ஸ்க் பகுதி விடுவிக்கப்பட்ட பிறகு, இலங்கையர்கள் மீண்டும் கார்கிவ் நகருக்கு கால்நடையாகச் செல்ல முடிவு செய்தனர், வழியில் அவர்கள் ஒரு ஹோட்டல் காவலரைச் சந்தித்தனர், அவர் அவர்களுக்கு அடைக்கலம் அளித்து, அதைப் பற்றி உக்ரைனிய காவல்துறைக்குத் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது; பொலிசார் இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் முறையான வாழ்க்கை நிலைமைகள் வழங்கப்பட்டுள்ளன“ என்றார்.

மார்ச் மாதம் முதல் ரஷ்யர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த ஏழு இலங்கைப் பிரஜைகள் கார்கிவ் மாகாணத்தின் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்கப்பட்டதாக செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் பிறப்பு வீதம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

east tamil

யாழில் புதுவருட அட்டகாசம்: வீதியில் சென்றவர்களை காரணமேயில்லாமல் தாக்கிய சம்பவத்தில் 3 பேர் கைது!

Pagetamil

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு

east tamil

Leave a Comment