25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

விபத்தில் இளைஞன் பலி!

கொழும்பு 07, கறுவாத்தோட்டம் விஜேராம சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொஸ்மீட் பிளேஸில் இருந்து விஜேராம சந்தி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதிக வேகம் காரணமாக மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சாரதி மது போதையில், கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கறுவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

Leave a Comment