Pagetamil
குற்றம்

பளையில் மணற்கொள்ளையர்கள் 3 பேர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

பளை பிரதேசத்திற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று (05) அதிகாலை 1.00மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் மண் ஏற்றிய நிலையில் உள்ள உழவு இயந்திரங்கள் வருகின்ற 07ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!