நகரசபை செலவில் பிலா மரம் வெட்டிய உறுப்பினர்!

Date:

நுகேகொட, தலபத்பிட்டியவில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணியிலுள்ள நான்கு பலா மரங்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெட்டுவதற்கு உறுப்பினர் ஒருவர் சபை இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டினால் மஹரகம நகர சபையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ருவன் ஜயசிங்கவினால் இந்த வார சபைக் கூட்டத்தில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.

சுயேச்சைக் குழுவின் கீழ் போட்டியிட்ட ஆளும் கட்சி உறுப்பினர் சுமன்வதி அமரசிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வரை 400,000 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பலா மரங்களை சபை பேக்ஹோக்களை பயன்படுத்தி வெட்டியதாக அவர் கூறினார்.

நகரசபை பணிகளுக்கு ஆட்கள் மற்றும் இயந்திரம் தேவை என்று கூறி, பேரவைத் தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டு, அந்த உறுப்பினர் பேக்ஹோ மட்டுமின்றி, 10 நகரசபை ஊழியர்களையும் அழைத்துச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார்.

வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்து அனுமதி பெறாமலோ, நகர அபிவிருத்தி அதிகாரசபை அல்லது சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்காமலோ மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உடஹமுல்ல பிரதேச கிராமசேவகர் மிஹ்ரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும், சபை உறுப்பினர் அமரசிங்கவின் கணவர் பலம் வாய்ந்த தொடர்புகளைக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர் என்பதனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

சபையின் செயலாளர் கே டி தில்ருக்ஷியை ஊடகங்கள் தொடர்பு கொண்ட போது, முதல் மரத்தை வெட்டுவது தொடர்பான புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் ஆனால் அதன் பிறகு புகார்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

வெட்டப்பட்ட மரங்கள் மரக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், ஆனால் அவை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலங்களில் இல்லை என்றும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதாக சபையின் தலைவர் டிராஜ் லக்ருவன் பியரத்ன சபை கூட்டத்தில் தெரிவித்தார். காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், சபைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதால் திருமதி அமரசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்