Pagetamil
இலங்கை

60 வயதான அரச ஊழியர்கள் ஓய்வுபெற வேண்டுமென 70 வயது கடந்த அரசியல்வாதிகள் சட்டம் கொண்டு வருகிறார்கள்!

அரசு ஊழியர்களும் வேலை செய்ய வேண்டும் இல்லாவிடில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும். அரச ஊழியர் நாட்டுக்கு சுமை என கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு மாத்திரம் பல நூற்றுக்கணக்கானவர்களை நியமித்திருக்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கின்ற நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஐஓசி இலாபத்தில் இயங்குகின்ற போது சிபெட்கோ நட்டத்தில் இயங்குகின்றது. இதற்கான காரணம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளும், எல்லா நிறுவனங்களுக்கும் கடனுக்கு எரிபொருளை வழங்கியதன் காரணமாக நட்டத்தை நோக்கினார்கள்.

ஏயார் லங்கா நிறுவனத்தை விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ரெலிகாம் இலாபத்தில் இயங்குகின்ற போது அதனையும் விற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. வங்கிகளை விற்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

அரச தொழிலில் ஈடுபடுகின்றவர்களின் ஓய்வு ஊதியத்திற்கான 65 வயது வயதெல்லை குறைக்கப்பட்டு 60 ஆக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டுக்கு கேடு விளைகின்ற பாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போது அனைத்து நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் அங்கீகரிக்கின்றது.
இதனால் தான் இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது.

ஆகவே இந்த நாடாளுமன்றை உடனடியாக கலைத்துவிட்டு புதிய தேர்தலுக்கு புதிய மக்களாணைக்குச் செல்ல வேண்டும்.

நாட்டில் அரசியல்வாதிகள் அதிகமாக எழுபது வயதிற்கும் அதிகமான நபர்களாக இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன், நிமல் ஸ்ரீபால டி சில்வா போன்றவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

60 வயதுக்கு மேல் சிந்திக்கமாட்டார்கள், செயலாற்ற முடியாது எனக்கூறி அரச ஊழியர்களுக்கு 65 வயதில் இருந்து 60 வயதாக குறைக்கின்ற சட்டத்தை கொண்டு வருகின்ற போது அரசியல்வாதிகளுக்கு எந்தவிதமான சட்டமும் கிடையாது.
அரசியல்வாதிகளுக்கும் வயதெல்லை இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டு அதன் மூலமாக அதற்கு பிறகு வயது முதிர்ந்த சக்கர நாற்காலியில் நாடாளுமன்றம் வருகின்றவர்களை தடுக்க வேண்டும். நாட்டு மக்களுடைய இளைஞர்களுடைய யுவதிகளினுடைய அபிலாசைகளை செய்கின்ற இடமாக நாடாளுமன்றம் இல்லை.

அரசு ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும் இல்லாவிடில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும். அரச ஊழியர் நாட்டுக்கு சுமை என கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு மாத்திரம் பல நூற்றுக்கணக்கானவர்களை நியமித்திருக்கின்றார்.

தனது ஊடகப் பிரிவுக்கு ஊடகங்களோடு தொடர்பு கொள்ள மாத்திரம் இந்த நபர்களை நியமித்திருக்கின்றார். அவர்களுக்கு 80 ஆயிரத்துக்கு அதிகமான சம்பளம் வாகனங்கள் உட்பட ஏனைய வசதி வாய்ப்புகள் அனைத்தும் வழங்கப்படுகிறது.எவ்வாறு தனது ஊடகப் பிரிவுக்கு மாத்திரம் இத்தனை நபர்களை நியமித்திருக்கின்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் தந்தையின் பணமாகவோ அல்லது அவரது குடும்பத்தினரின் பணமாகவோ இருந்தால் அது நமக்கு பிரச்சனையே இல்லை. அது மக்களின் பணம். மக்கள் பணம் பணம் இல்லாமல் அல்லல்ப்படும்போது இவ்வாறு வகைத்தொகையின்றி ஜனாதிபதி நியமனங்களை மேற்கொள்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்கு வருவதன் மூலம், எதிர்காலத்தில் மக்கள் இவரது நடவடிக்கைகளை அங்கீகரிக்கப் போவதில்லை. இவர் வருவதன் மூலம் வந்ததன் மூலமாக நாட்டுகோ மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் பயக்கப் போவதில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்கிசை: ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

east tamil

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

Leave a Comment