2ஆம் உலகப்போர் கால குண்டு வெடிக்க வைக்கப்பட்டது!

Date:

தொடங்கொட பகுதியில் மீட்கப்பட்ட இரண்டாம் உலகப் போர் காலத்தை சேர்ந்ததென கருதப்படும் விமானக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டதால், வீடுகள் சில சேதமடைந்துள்ளன.

தொடங்கொட துடுகலவில் வியாழக்கிழமை (1) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது.

கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி நாகொட, பொம்புவல பிரதேசத்தில் உள்ள தனியார் காணியொன்றில் அதன் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது விமானக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த குண்டு இரண்டாம் உலகப்போர் காலத்தை சேர்ந்தது என சந்தேகிக்கப்படுகிறது.

அப்பகுதியிலுள்ள கிரானைட் குவாரி ஒன்றில் வெடிக்க வைக்கப்பட்டது.

சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் மற்றும் STF அதிகாரிகள் அப்பகுதியில் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டதுடன், சேதத்தை ஆராயவும் மதிப்பிடவும் சிறப்பு குழு நியமிக்கப்படும் என்று குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு மற்றும் தொடங்கொட பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்