35,000 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோலை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்து பெற்றோல் இறக்கும் பணி நேற்று (30) இரவு ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த நெரிசல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 4000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



