3 எம்.பிக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்!

Date:

அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டமை மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

3 எம்.பி.க்கள் தங்கள் வீடுகளுக்கு கும்பல் தீ வைத்தது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதன்படி, விசாரணைக்கு தேவையான அடிப்படை உண்மைகளை 3 எம்.பி.க்களிடம் இருந்து இன்று பெற்றுக்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களும் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்