இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஏகமனதாக தெரிவு

Date:

இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஏகமனதாக தெரிவானார்.

இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று 27 சனிக்கிழமை 27 காலை 8.30 மணியளவில் கொழும்பு ஆங்கிலிக்கன் மறைமாவட்டத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய கிறித்தவ மன்றத்தின் ஊழியர்கள் நடார்த்திய வழிபாட்டில், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டேனியல் தியாகராஜா இறுதி ஆசி வழங்கினார்.

இக்கூட்டமானது, தேசிய கிறித்தவ மன்றத்தின் தலைவரான மெதடித்த திருச்சபை தலைவர் அருட்தந்தை எபினேசர் யோசேப் தலைமையில் இடம்பெற்றது

தலைவர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

கொழும்பு இறையியல் கல்லூரி மற்றும் யூத் போ கிறைஸ்ற் ஆகியன அங்கிருந்தவர்கள் வாக்களிப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று முழு அங்கத்துவத்தினை பெற்றன.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு பின்வரும் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்;
தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் Rt.Rev.Dr Daniel S. தியாகராஜா தெரிவானார்.

துணைத் தலைவர்களாக கிறிஸ்தவ சீர்திருத்த தேவாலயங்களின் தலைவர் வண பிதா ஷெர்லி பேபர் மற்றும் பேக் டு த பைபிள் அமைப்பின் டொக்டர் மயூகா பெரேராவும் தெரிவாகினர்.

பொதுச் செயலாளராக ரெ.சுஜிதர் சிவநாயகமும், பொருளாளராக திரு.ஒலிவர் விக்கிரமசிங்கவும், உதவி பொருளாளராக கலாநிதி அஜித் விக்ரமசிங்கவும் தெரிவாகினர்.

நிர்வாகக் குழுவிற்கும் ஏழு உறுப்பினர்களும் இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். தென்னிந்திய திருச்சபையின் சார்பில் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள இயலாத அருட்பணி பத்மதயாளனிற்கு பதிலாக வணபிதா ஜெபசிங் சாமுவேல் தெரிவானார்.

மேலும், அருட்பணி சிறீலால் கருணாரத்ன மற்றும் செல்வி வஸ்ரி அன்ரூயா, செல்வி பிறின்சி டிலீசா யெயசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இறுதி பிரார்த்தனை செய்து ஆசி வழங்கினார். தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வணக்கத்திற்குரிய டானியல் தியாகராஜா தனது பதவிக்காலத்தில், இரண்டாவது தடவை தலைமை ஏற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்துடன் இலங்கை திருச்சபை (அங்கிலிக்கன்), மெதடிஸ்த திருச்சபை, தென் இந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.), இலங்கை பெப்டிஸ்ட் திருச்சபை, பிரஸ் பெற்றேரியன் திருச்சபை, இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை (சி. ஆர்.சி.), லங்கா லூதரன் சபை, இர ட்சணியசேனை ஆகிய சபைகள் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன. அத்துடன் கிறிஸ்தவ ஒருமைப் பாட்டு அமைப்புக்களான வை. எம்.சி.ஏ., வை.டபிள்யூ.சி.ஏ, இலங்கை வேதாகமச் சங்கம், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், இலங்கை மாணவர் இயக்கம், கிறிஸ்துவுக்காக இளைஞர் இயக்கம், கொழும்பு இறையியல் கல்லூரி ஆகியனவும் உறுப்புரிமை பெற்று இணைந்து சேவையாற் றுகின்றன.

1947ல் இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் என்று உருவாக்கப்பட்டு பல்வேறு சமய, சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்