சுன்னாகத்தில் ‘பலே திருடன்’கைது!

Date:

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில் நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக தெரிவித்து முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் வடக்கு கம்பம் புலம் பகுதிக்கு விரைந்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரவினர் 7துவிச்சக்கர வண்டிகள், 4மோட்டார், 2 எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றினர்.

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்