26.5 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

முத்தையா சிவலிங்கத்தின் முதலாம் ஆண்டு நினைவு!

மறைந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முத்தையா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 4 மணியளவில், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் விவேக் தலைமையில் இடம்பெற்றது.

முதல் ஈகைச் சுடரினை அவரது பாரியார் ஏற்றினார். தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டது. பின்னர் அன்னாரின் திரு உருவப்படத்திற்கு அவரது பாரியார் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனும் மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மலரஞ்சலியை அமரரின் பிள்ளைகள் ஆரம்பித்து வைக்க, மலரஞ்சலியும் இடம்பெற்றது. தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில், மக்கள் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

ஈழத்து தமிழ் இலக்கியவாதியான முத்தையா சிவலிங்கம் கடந்த வருடம் 30.08.2021 அன்று கொவிட் தொற்றினால் மறைந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புறக்கோட்டையில் சட்டவிரோத மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

east tamil

அனர்த்த உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகை உயர்வு: அரசு அனுமதி

east tamil

தெமோதர ஜங்சனில் லொரி விபத்து

east tamil

கனடாவில் துயரச்சம்பவம்: யாழ் வாசியும், குழந்தையும் விபத்தில் பலி!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் சிறப்பு ஏற்பாட்டு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு!

Pagetamil

Leave a Comment