‘குடித்தால் வீரியம் அதிகரிக்கும்’: பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு சுடுநீரில் கஞ்சா கலந்து கொடுத்து வல்லுறவிற்கு முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு வலைவீச்சு!

Date:

பயிற்சிப் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட செவனகல பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தற்போது விடுமுறையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை நீண்டகாலமாக துன்புறுத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. சந்தேக நபர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், அவரது இருப்பிடத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.

வீரியத்தை அதிகரிக்கும் எனக்கூறி மேற்படி அதிகாரியினால் தனக்கு கஞ்சா கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது.

அந்த பொலிஸ் அதிகாரியும் கஞ்சா கசாயத்தை அருந்தியுள்ளார்.

செவனகலவில் இருந்து வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்பொலிஸ் உத்தியோகத்தர், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்