பிட்டிகல, திட்டரகொடவைச் சேர்ந்த 63 வயதுடைய தந்தையொருவர், ஞாயிற்றுக்கிழமை (21) இரவு தனது மகனைக் கொத்திக் கொன்றுள்ளதாக பிட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மகன் 40 வயதான திருமணமானவர். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தந்தையும் மகனும் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




