திருகோணமலையில் பிரபல முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் சமர் மீண்டும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த போட்டியின் ஆரம்பநிகழ்வு இன்று (21) திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களின் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைைக்கப்பட்டது.
50 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியானது திிருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மானவனும், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கிரிக்கெட் குழுவின் முன்னைநாள் தலைவருமான மறைந்த பிரபாகரன் திலக்ஷன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது நண்பர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்ட்டு வருகிறது.
இச்சுற்றுப் போட்டியின் முதல்போட்டியான இன்று (21) நாணயசுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட களமிறங்கும் தி/இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியை எதிர்த்து உவர்மலை விவேகானந்தா கல்லூரி அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தற்போது போட்டி ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய போட்டிகளாக எதிர்வரும் வியாழக்கிழமை திருகோணமலையின் பிரபல பாடசாலைகலான திருகோணமலை விபுலானந்தா கல்லூரி மற்றும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியன போட்டியிடவுள்ளதுடன் இப் போட்டியின் இறுதி சுற்று போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-