யூனியன் பிளேஸில் நேற்று இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்புக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் சிந்தக ராஜபக்ஷ ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைபாபாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் ஜீவந்த ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுள்ளது.
இவர்கள் மூவரும் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் (TID) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வசந்த முதலிகே உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரவுள்ளனர்.




