முட்டை விலை ரூ.5 குறைகிறது!

Date:

முட்டை ஒன்றின் விலை திங்கட்கிழமை (22) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவை அறிவித்தது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், கால்நடை வைத்தியர் சங்கம், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் ஏனைய உணவு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கோழி தீவன தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்மூலம், முட்டை விலை ரூ.60 இற்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதேவேளை, முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்காவிட்டால் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்