8 வயது சிறுவனை தாக்கி யானைக்கு அருகில் வீசிய விதானையார் கைது!

Date:

பொல்கஹவெல உடபொல பிரதேசத்தில் யானை ஒன்று கால்வாயில் குளித்ததை பார்த்துக்கொண்டிருந்த 8 வயது சிறுவனை தூக்கி கால்வாயில் வீசி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் உடபொல கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கால்வாய் கரையில் யானை ஒன்று நீராடிக் கொண்டிருந்ததை 8 வயதான சிறுவன் பார்த்துக் கொண்டிருந்துள்ளான்.

குடிபோதையில் அங்கு வந்த சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் சிறுவனை தூக்கி கால்வாயில் யானை இருந்த இடத்தில் வீசியுள்ளார்.

இதனால் சிறுவனிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சிறுவனின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கிராமசேவகர் கைது செய்யப்பட்டார்.

குடிபோதையில் இருந்த 54 வயதுடைய கிராம உத்தியோகத்தர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நேற்று 5 பேர் பலி

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில்...

சேரன் காணாமல் போன ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, ஒரு வருடத்திற்குப்...

எரிபொருள் விலைகள் எகிறின!

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்