ஹோமாகம பிரதேசத்தில் சுற்றித்திரியும் மான் கூட்டத்திற்கு வெறிநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 15 மான்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பொது சுகாதாரம் மற்றும் கால்நடை சேவைகள் பணிப்பாளர் எல்.டி.கித்சிறி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மான்களில் 02 மான்களுக்கு வெறிநோய் தாக்கியுள்ளதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பீதி அடையத் தேவையில்லை என வைத்தியர் எல்.டி.கித்சிறி தெரிவித்துள்ளார்.
நாய்களைத் தவிர, கீரிகள் மற்றும் மரநாய் போன்ற விலங்குகளாலும் ரேபிஸ் பரவும் அபாயமுள்ளதாக அவர் விளக்கினார்.
எவ்வாறாயினும், மான்கள் தங்கள் நிலத்திலும் தோட்டங்களிலும் மேய்ந்து கொண்டிருந்தால், விலங்குகளின் உமிழ்நீரைப் பற்றி கவனமாக இருக்குமாறு அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.