சிங்கப்பூரில் 6 பேரில் ஒருவர் உடல் உருவம் பற்றிய பதற்றத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள், குறிப்பாக இளையவர்கள்.
ரிக்ரொக், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களில் தினமும் 3 மணிநேரத்திற்கு மேல் செலவு செய்பவர்களிடையே அந்த அபாயம் ஆக அதிகமாக இருப்பதாய் ஆய்வு கூறுகிறது.
வெளித்தோற்றம் குறித்த பதற்றத்தை ஆராயும் மதிப்பீடு மூலம் அது கணக்கிடப்பட்டது.
சமூக ஊடகத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கப் பெற்றோர், ஆசிரியர்கள், அரசாங்கம் என அனைவரின் உதவி எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வின் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக ஆய்வை மேற்கொண்ட Milieu Insight நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஸ்டீஃபன் டிரேசி கூறினார்.
அந்த ஆய்வில் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2,600 பேர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த பெரியவர்கள் தினமும் சராசரியாக இரண்டரை மணிநேரம் சமூக ஊடகத்தில் செலவிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.