27 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

நல்லாட்சி கால நடைமுறையை மீண்டும் செயற்படுத்தக் கோருகிறார் அமைச்சர் டக்ளஸ்!

நல்லாட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழில் தேசிய கீதம் இசைக்கும் நடைமுறையை மீண்டும் அமுல்ப்படுத்தும்படி கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (15) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டதாக ஈ.பி.டி.பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தற்போதைய ஜனாதிபதியின் நல்லெண்ண வெளிப்பாடாக சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் அமைச்சரின் குறித்த வேண்டுகோள் அமைச்சரவையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பன்மைத்துவம் சமத்துவம், சம உரிமை போன்றவை கடந்த காலங்களில் கொள்கையளவில் மாத்திரம் இருந்தமையும் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு காரணமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டியதுடன், எதிர்காலத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களும் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வகையில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

east tamil

போக்குவரத்து முறைகேடுகள் தடுக்கும் e-Traffic செயலி அறிமுகம்

east tamil

புலமைப்பரிசில் சர்ச்சை: அனைத்து மாணவர்களுக்கும் 3 கேள்விகளுக்கு முழுமையான புள்ளிகள்!

Pagetamil

குற்றத்தடுப்பு பிரிவினரால் நாமல் குமார கைது

east tamil

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் குறித்த விவாதம்

east tamil

Leave a Comment