யாழ்ப்பாணம், பலாலியிலுள்ள கொல்லப்பட்ட இந்தியப் படையினரின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஸ் ஶ்ரீ நடராஜ், யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ஜயசுந்திர ஆகியோர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1987 இல் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் படையெடுத்து வந்த இந்தியப் படையினர் 1990 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நிலை கொண்டிருந்தனர். இந்தக் காலப்பகுதியில் மோதலில் கொல்லப்பட்ட படையினரே நினைவுகூரப்பட்டனர்.
இதேவேளை, இந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை படுகொலை, பிரம்படி படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகளில் இந்தியப் படைகள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1