ரஷ்யாவிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதாகவும் மற்ற நாடுகளைவிட அவை பல ஆண்டுகாலம் முன்னோக்கிய நிலையில் இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.
தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற ஆயுதக் கண்காட்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
நட்பு நாடுகளிடம் அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆசியா, தென்னமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய வட்டாரங்களில் வரலாற்றுரீதியாக வலுவான, உண்மையான, நம்பத்தக்க நட்பு நாடுகளை ரஷ்யா போற்றுவதாக அவர் சொன்னார்.
நட்பு நாடுகளுக்கு வழங்கப் புதிய ஆயுதங்களை உருவாக்கத் திட்டமிடுவதாகவும் புட்டின் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1