24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
சினிமா

திருமணம் எப்போது?: நடிகை வெளியிட்ட தகவல்!

நடிகை அம்மு அபிராமி தனது திருமணத்தை பற்றி பேசியுள்ளார்.

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’ போன்ற படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டார்.

அதன்பின் என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் அம்மு அபிராமியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அம்மு அபிராமி கூறும்போது, “எனது திருமணம் குறித்து நிறைய கேள்விகள் வந்துள்ளன. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளன. திருமணத்துக்கு இது சரியான நேரம் என்று நினைக்கும்போது திருமணம் செய்து கொள்வேன்” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

Leave a Comment