அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் ஹினிதும பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறி ஒன்றில் 390 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்ற போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹினிதும பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி உடுகம நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஹினிதும பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1