Pagetamil
முக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி 2,000 நாள் போராட்டம்: கிளிநொச்சியில் பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (12) கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9.30 மணியவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, டிப்பா சந்தியில் நிறைவடைந்தது.  குறித்த போராட்டத்தில்  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

வலிந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளை தேடியும், நீதி கோரியும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2000வது நாளான இன்று மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியானது, டிப்போ சந்திவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதனை தொடர்ந்து நிறைவு பெற்றது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையகத்திற்கு மகஜர் ஒன்றினையும் அவர்கள் இன்றைய தினம் அனுப்பி வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் , எஸ்.கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த காலத்தில் கையளிக்கப்பட்டும்,சரணடைந்தும்,கடத்தப்பட்டும்,விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் கடந்த 2000 நாட்களாக நீதி இன்றி போராடி வருகின்றோம். ஆரம்பத்தில் இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்த்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவை சந்தித்து நீதி கோரியபோது அவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றியிருந்தார். இதன் காரணமாகவும் சிறிலங்காவின் நீதித்துறையின் ”சிங்களவர்க்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம்“ என்ற இனத்துவேச அணுகுமுறை காரணமாகவும் (உ.ம் கொலை குற்றசாட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கபட்ட சிங்கள இராணுவத்திற்கு சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய இராயபக்ச பொது மன்னிப்பு வழங்கி பதவி உயர்வும் வழங்கியுள்ளார். இது போல பல உதாரணகள் உண்டு ) சிறிலங்கா அரசிடம் நீதி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து சர்வதேசத்திடம் மட்டுமே நீதி கேட்டு போராடி வருகிறோம். எம்முடன் இப்போராட்டத்தில் இணைந்திருந்த 138 மேற்பட்ட பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நிலை அறியாமலும், நீதி கிடைக்காமலும் இறந்து விட்டனர். நாமும் எமது வயோதிப காலத்தில் நோய்வாய்ப்பட்டு உடல் இயலாத நிலையிலும் சர்வதேசத்தில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

எமது உறவுகளில் பெருந்தொகையானோர் 2009 இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிரோடு கையளித்த சரணடைந்த உறவுகளை இறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய இரக்கமின்றி அறிவித்தார். இதில் 29ம் மேற்பட்ட கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டதில் பாதுகாப்புச் செயலராக இருந்து, கட்டளைகளை வழங்கி திட்டமிட்டு இனவழிப்பை மேற்கொண்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தானே பாதுகாப்பு செயலராக இருந்து மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்டவர் இவரே. இவரின் இவ்வளவு அட்டுழியங்களுக்கும் இவரது சகோதரராகிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்து சகல வழிகளிலும் இவ் இனவழிப்பு யுத்தத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்து முன்னின்று வழிநடத்தினார். இவருக்கு துணையாக இவரது நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளும், சிங்கள அதிகாரிகளும் தமிழரை சித்திரவதை செய்து, கொன்று, கற்பழித்து, ஊனமாக்கி,தமிழரின் சொத்துக்களை கொள்ளையடித்து எம் இனத்தை இனவழிப்பு செய்தனர்.

மேற்படி கொடூரங்களைப் புரிந்த சிங்கள அரசுக்கு ஐ.நா வின் தீர்மானம் 30/1 இன் படி பொறுப்புக் கூறலுக்கான கால அவகாசத்தை நீடித்ததன் மூலம் காலம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் சிறிலங்கா அரசானது தன்னிச்சையாகவே அனுசரணையிலிருந்து விலகிக் கொண்டது. கடந்க காலங்களிலும் இதையே சிறிலங்கா அரசாங்கம் (சர்வதேச மத்தியத்துடன் நடைபெற இனப்பிரச்சனைகான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் இருந்து சிறிலங்கா அரசு ஒருதலை பட்சமாக விலகியது) தன் யுக்தியாகச் செய்தது.

சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் என்று வீணாக எதிர்பார்த்து காலத்தை மேலும் கடத்தாது தமிழருக்கு இழைத்த அனைத்து குற்றங்களுக்காகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே ஐ.நா உட்பட்ட சர்வதேசமும் இறந்த பெற்றோர்களுக்கும், வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வயோதிப பெற்றோராகிய எமக்கும் செய்யக் கூடிய சர்வதேச நீதியாகும்.

அதுமட்டுமல்ல,1956ம் ஆண்டிலிருந்து இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட இனம் எமது தமிழ் இனம். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் “மீள் நிகழாமையை” உறுதிப்படுத்த முடியுமே அன்றி காலங்களை கடத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது. வழங்கப்படும் தண்டனை இனி ஒரு இனவழிப்பு நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் தமிழர்களாக எமது அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழவே ஆசைப்படுகின்றோம். உண்மையில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதானால் சம்பந்தப்பட்ட தரப்பின் கோரிக்கை அறியப்பட வேண்டும். எமது தமிழ் பரராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் நமக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக,சுய இலாபமே நோக்காகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் விடயத்திலும், தமிழர் உரிமை (அரசியல் தீர்வு) விடயத்திலும் செயற்படுகிறார்கள். எனவே அவர்களின் கருத்து மக்கள் கருத்தாகக் கணக்கிலெடுக்கப்படாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பாதிக்கப்பட்ட எமது விருப்பே மேலோங்க வேண்டும்.

இந்த போராட்டத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை வ

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூளையில் அதிக இரத்தக்கசிவு… கோமா நிலை… தொடர்ந்து செயற்கைச் சுவாசம்; மிகமிக ஆபத்தான கட்டத்தில் மாவை: நள்ளிரவில் மாவை வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

Leave a Comment