தகாத உறவால் பயங்கரம்: மருமகளின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்ற மாமி!

Date:

திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக தனது பெறா மகனின் மனைவியின் தலையை வெட்டியெடுத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் மாமியார்.

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தின் ராயச்சோடியில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவரே, மருமகள் வசுந்தராவை கொடூரமாக படுகொலை செய்தார்.

மருமகளின் தலையை கத்தியால் வெட்டியெடுத்துக் கொண்டு, பொலிஸ் நிலையத்திற்கு சென்றார்.

வசுந்தராவின் கணவரும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். வசுந்தராவின் கணவரின் தாயும் இறந்து விட்டார். வசுந்தரா வேறு ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்துள்ளார்.

கணவர் இறந்த பிறகு சொத்துக்கள் அனைத்தும் வசுந்தராவின் பெயருக்கு மாற்றப்பட்டன. இதன் மூலம், வசுந்தராவின் சொத்துக்களை, திருமணத்திற்கு புறம்பான உறவை வைத்துள்ள நபரிடம் எழுதி வைக்க முயன்ற விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதை வைத்து வசுந்தராவின் கணவரின் தம்பி சந்து மற்றும் அவரது தாயாரின் சகோதரி சுப்பம்மா ஆகியோர் வசுந்தராவை கொல்ல திட்டமிட்டனர். அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மதியம் வசுந்தராவின் தலை வெட்டப்பட்டது.

பின்னர் பட்டப்பகலில் வசுந்தராவின் தலையை கையில் எடுத்துக் கொண்டு, சுப்பம்மா காவல் நிலையம் சென்றது பார்ப்பவர்கள மிரள வைத்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனின் பிரம்மாண்ட கட்அவுட் இலங்கையில் வைக்கப்பட்டதா? வைரலான படத்தின் உண்மை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும், கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தமிழீழ...

பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்த 13 வயது மாணவி உயிரிழப்பு

நுவரெலியா, நோர்வூட் பகுதியில் பால் சேகரிக்கும் லொறியிலிருந்து தவறி விழுந்து 13...

அரச ஊழியர்களுக்கு 2027 ஜனவரி முதல் மூன்றாம் கட்ட சம்பள அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 2027 ஜனவரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்