பிரேசிலில் தாயை ஏமாற்றி அவரிடமிருந்து 145 மில்லியன் டொலர் மதிப்பிலான ஓவியங்கள், நகைகள், பணம் ஆகியவற்றைப் திருடிய மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மறைந்த கலைப்பொருட்கள் சேகரிப்பாளரான ஜீன் போகிசியின் மனைவி ஜெனிவிவ் போகிசி (82) என்பவரையே, மகள் சபின் கோல் போகிசி (48) ஏமாற்றி கொள்ளையிட்டுள்ளார்.
சபினின் மகள் திடீரென உயிரிழந்த பின், அவர் மனநிலை பிறழ்ந்தவரை போல காண்பித்துள்ளார். தன்னைக் குணப்படுத்தும் சக்தி கொண்ட ஒரு பெண்ணைப் பணியமர்த்துமாறும் கூறி அந்த மகள் தனது தாயை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
அதற்காக அந்தத் தாய் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் பெப்ரவரி வரை 970,000 டொலர் செலவு செய்தார்.
பின் சந்தேகம் எழுந்ததால் அவர் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டார்.
அதனால் மகளும் அவருடன் மோசடியில் ஈடுபட்ட 5 பேரும், அந்தத் தாயை மிரட்டவும் தாக்கவும் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
சுமார் ஓரு வருடம் தாயார் வீட்டிலேயே தனிமைப்படுத்தியதோடு வீட்டிலிருந்த அவருக்குச் சொந்தமான கலைப்பொருள்களையும் நகைகளையும் அவர்கள் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருடப்பட்ட ஓவியங்களில் சில அருங்காட்சியகங்களுக்கு விற்கப்பட்டன. அர்ஜெண்டின தொழிலதிபர்கள் இருவரும் ஓவியங்களை வாங்கியுள்ளனர்.
மகளால் திருடப்பட்ட 16 ஓவியங்கள் மீட்கப்பட்டன. கொள்ளையுடன் தொடர்புடைய மகள், மூன்று கூட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர்.