காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக, போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இருந்து இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நாணயக்கார, போராட்டக்காரர்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறுவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராது என்றார்.
நகரங்களிலும் வட்டார அளவிலும் போராட்டம் தொடரும் என நம்புகிறோம் என்றார்.
இதேவேளை, போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும் நேற்று (9) இரவு காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1