தேசிய எரிபொருள் அனுமதி பதிவிற்கான Q.R. குறியீட்டை பெறுவதற்கான புதிய பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (8) தெரிவித்தார்.
மோட்டார் வாகனத் துறையின் கணினி அமைப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கியூ.ஆர். குறியீட்டின் புதிய பதிவுகள் 48 மணித்தியாலங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதன்படி புதிய பதிவுகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்




