பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
அவர்களில் 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தனர்.
ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா காலம் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பது விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு மேலாளர் தங்கள் நிகழ்வுகளை முடித்த பின்னர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த வாரம் 3 வீரர்கள் காணாமல் போனதை தொடர்ந்து, அணி வீரர்களின் கடவுச்சீட்டுக்கள் நிர்வாகத்தால் பொறுப்பேற்கப்பட்டது. எனினும், அதன் பின்னரும் 7 பேர் மாயமாகியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1