ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ணில் விக்கிரமசிங்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக ஜப்பான் செல்லலாமென தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உத்தியோகபூர்வ இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதுவே அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், முதலாவது வெளிநாட்டு பயணமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது, ஜப்பானிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை பெறுவது பற்றிய பேச்சுக்களை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட்டாபய ஆட்சியின் தவறான அணுகுமுறைகளால், ஜப்பானுடனான உறவுகள் சீர்குலைந்திருந்தன. இதை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாக சுட்டிக்காட்டியிருந்தார். ஜப்பானுடனான உறவுகளை சீர்செய்யும் முயற்சியில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.
ஜப்பான் பயணத்தை தொடர்ந்து, சீனாவிற்கும் ஜனாதிபதி ரணில் பயணம் மேற்கொள்வார் என தெரிய வருகிறது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து மேலும் 1.35 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் பேச்சுக்களும் நடந்து வருகிறது.