26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

உலகில் அமைதியான போராட்டங்கள் நடப்பதில்லை; தியானம் செய்து ஊழல்வாதிகளை விரட்ட முடியாது: சரத் பொன்சேகா!

உலகப் போராட்டங்கள் அமைதியானவை அல்ல என்றும், தியானம் செய்வதன் மூலமும், தவம் செய்வதன் மூலமும் ஒரு நாட்டில் வஞ்சகர்களை விரட்ட முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை என தெரிவித்த பொன்சேகா, எமது இலக்குகளை அடைய வெளியில் சென்று போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தயாராக வேண்டும் என்றும் அப்போது உயிர் தியாகம் செய்தவர்களை மக்கள் மாவீரர்களாக கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.

போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் 20 முதல் 25 பேர் வரை இறக்க நேரிடும் என்று குறிப்பிட்ட பொன்சேகா, இதுபோன்ற தாக்குதல்களால் போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும் கூறினார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகம் தலையிட்டு வான் தாக்குதல்களை நடத்தலாமென்றும், இராணுவ தலைமையகத்தை கூட அழிக்க முடியும் எனவும் மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கான உதாரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இன்று அரச பயங்கரவாதம் செயற்படுவதாகவும், சில இளைஞர்கள் சிறையில் உள்ளதாகவும், சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான கட்டளைகளை பின்பற்ற வேண்டாம் என தாம் பலமுறை இராணுவத்திடம் வலியுறுத்தியதாகவும், இராணுவம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்திற்குள் பல்வேறு குழுக்கள் இருப்பதாகவும், பணம் பெறும் குழுக்களும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசியல் வாதிகளுடன் இரவோடு இரவாக போராட்ட களத்தில் நிற்கும் குழுக்களும் இருப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம் ஆயுதப் போராட்டமாக இல்லாமல் இருந்தால் நல்லது என்றும் அவர் கூறினார்.

ஆட்சியாளர்கள் ஊழல் செய்தால் தூக்கி எறிய வேண்டும் என்றும் போராட்டத்துக்காக யாருடனும் பேசத் தயார் என்றார்.

கட்சி சார்பற்ற போராட்டம் என தெரிவித்த பொன்சேகா, அரசியல் நிகழ்ச்சி நிரலின்றி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் தலைவர்கள் உருவாகுவார்கள் எனவும் தெரிவித்தார்.

போராட்டத்திற்காக 1500 வழக்கறிஞர்களை திரட்டி வருவதாகவும், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட குழுக்களை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

நீரில் மூழ்கி சிறுவன் பலி

east tamil

Leave a Comment