29.3 C
Jaffna
March 29, 2024
இந்தியா

அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக தலைமை அலுவலக சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுகபொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்தது. அதில் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

இந்த சீலை அகற்றக்கோரியும், அலுவலக சாவியை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகதலைமை அலுவலகத்தின் சாவியை பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும், ஒரு மாத காலத்துக்கு தொண்டர்கள் யாரையும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து, பழனிசாமியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், சாவியை பழனிசாமியிடம் வருவாய் துறையினர் ஒப்படைத்ததை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment