பொதுநலவாய விளையாட்டு 2022 இல் ஆடவர் 100 மீற்றர் இறுதிப் போட்டியில் யுபுன் அபேகோன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் யுபுன் அபேகோன் ஆவார்.
“இப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை. நான் செய்தேன்! நான் என்னை பெருமைப்படுத்தினேன், எனக்காக இருந்த அனைவரையும் பெருமைப்படுத்தினேன்! இந்த பந்தயத்தின் ஒவ்வொரு தருணத்திலும் உடனிருந்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இது எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய விஷயங்களின் தொடக்கமாகும். நான் கடினமாக உழைக்கப் போகிறேன்” என்று வெற்றிக்குப் பிறகு யுபுன் பதிவிட்டுள்ளார்.
இந்த போட்டியில் 10.14 விநடிகளில் அவர் பந்தய துரத்தை கடந்தார்.
கென்யாவின் பெர்டினாண்ட் ஓமன்யாலா தங்கப் பதக்கதையும், தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
பாரா தடகள வீரர் பாலித பண்டார நேற்று வட்டு எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Yupun Abeykoon you Star!!! Bronze for Sri Lanka at CWG 2022!!! pic.twitter.com/549I4djcPF
— Nizraan Jumat (@nizraanj) August 3, 2022
Bronze for Sri Lanka courtesy of Yupun! #CommonwealthGames2022 #lka #SriLanka pic.twitter.com/U6gwqJnFet
— Shaq Attack (@ShaqAtaq) August 3, 2022