தற்கொலை செய்தவர்களின் சடலங்களே காலிமுகத்திடலில் கரையொதுங்கியதா?

Date:

காலி முகத்திடல் கடற்கரையில் நேற்று (01) காலை கோட்டை பொலிஸாரால் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் காலிமுகத்திடல் கடற்கரையில் கரையொதுங்கிய இரண்டாவது சடலம் இதுவாகும்.

நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் 40 வயது மதிக்கத்தக்க நபருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று காலை காலி முகத்துவாரத்தில் சடலங்கள் கரையொதுங்கியது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் நேற்று மாலை வரை அடையாளம் காணப்படவில்லை.

இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 29ஆம் திகதி காலிமுகத்திடல் கடற்கரையில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அந்த இளைஞன் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பின்னர் அடையாளம் காணப்பட்டது.

19 வயதுடைய இளைஞன் மன உளைச்சலில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த 27ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறினார். 29ஆம் திகதி காலி முகத்திடல் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை, அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்