“அடுத்தப் பட அறிவிப்புடன் வருகிறேன்”: சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகிய லோகேஷ்

Date:

‘விக்ரம்’ படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை இந்திய அளவில் அடையாளப்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைகிறார். ‘விஜய் 61’ என அழைக்கப்படும் அப்படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் ‘விஜய் 61’ படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் இருந்து சில நாட்கள் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் லோகேஷ். தனது வலைதள பக்கத்தில் இன்று இதை பதிவிட்டவர், “நான் அனைத்து சமூக ஊடக தளங்களில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள நினைக்கிறேன். எனது அடுத்த படத்தின் அறிவிப்புடன் நான் விரைவில் திரும்பி வருவேன். அதுவரை அனைவரையும் பார்த்துக்கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

‘விஜய் 61’ படத்திற்கான எழுத்து வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார் லோகேஷ். அதில் கவனம் செலுத்துவதற்காக சமூக வலைதளங்களில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்க முடிவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் காதலனை திருமணம் முடித்த யாழ் யுவதி எதிர்கொண்ட சிக்கல்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும் இலங்கைப் பெண்ணை இந்தியாவில் இருந்து நாடு...

‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா...

தங்கச்சங்கிலியுடன் மாயமான யுவதி

இத்தாலியில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, குறுகிய கால விடுமுறைக்காக நாடு திரும்பிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்