27.6 C
Jaffna
March 28, 2024
விளையாட்டு

பொதுநலவாய பதக்கப் பட்டியலில் இலங்கை 24வது இடம்!

2022 பொதுநலவாய விளையாட்டுப் பதக்க அட்டவணையில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

போட்டிகளின் நான்காவது நாள் முடிவில், அவுஸ்திரேலியர்கள் 31 தங்கப் பதக்கங்கள் உட்பட 71 பதக்கங்களை வென்றுள்ளனர். தலா 20 வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

21 தங்கப் பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் இங்கிலாந்தும், 13 தங்கப் பதக்கங்களுடன் நியூசிலாந்தும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

மூன்று தங்கப் பதக்கங்களுடன் இந்தியா ஆறாவது இடத்தையும், ஸ்கொட்லாந்து, மலேசியா, நைஜீரியா மற்றும் வேல்ஸ் ஆகியவை முதல் 10 இடங்களைப் பூர்த்தி செய்கின்றன.

ஒரேயொரு வெண்கலப் பதக்கத்துடன் இலங்கை தரவரிசையில் 24வது இடத்தில் உள்ளது.

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பல இலங்கையர்கள் இன்று களமிறங்கவுள்ளனர்.

ஜூடோ, குத்துச்சண்டை, பளு தூக்குதல் மற்றும் தடகளப் போட்டிகளில் இலங்கையர்கள் இடம்பெறுவார்கள்.

குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் இன்று பிற்பகல் 100 மீற்றர் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்.

அவரது 100 மீட்டர் முதல் சுற்று போட்டி மாலை 3.10 மணிக்கு நடைபெற உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

தோல்வியின் பிடியில் பங்களாதேஷ்

Pagetamil

இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்ஜய, காமிந்து சதம்: பங்களாதேஷின் வெற்றியிலக்கு 510

Pagetamil

பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது!

Pagetamil

சிஎஸ்கே புதிய கப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Pagetamil

Leave a Comment